35 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (05.06.2023) வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகன் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்து புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு தேசிய மட்டத்தில் பரீட்சை நடத்தப்பட்டது. பரீட்சைமூலம் 35 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் உட்பட நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயதிலக ஹேரத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles