46 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸ்திரேலியா!

இலங்கையில் இருந்து தமது நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலியக் கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாகக் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டபோது ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களே இன்று ஆஸ்திரேலியக் கப்பல் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், “ஆட்கடத்தலைத் தடுப்பதில் இலங்கைப் பங்காளிகளுடனான உறவை ஆஸ்திரேலிய அரசு உயர்வாக மதிக்கின்றது” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles