செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (16) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

அகழாய்வின் 34ஆவது நாளான இன்று , மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 420 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 416 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles