இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி குறித்து ஆராய்வு

இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு பொறுப்பான வலய கல்விப் பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“கல்வியே நம் சமூக மாற்றத்திற்கான சிறந்த சாதனம்” என்ற பிரதி அமைச்சரின் சிந்தனைக்கு அமைய வே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் பௌதீகவள அபிவிருத்தி, ஆசிரிய பற்றாக்குறை, பாடசாலை காணி மற்றும் விளையாட்டு மைதானம் , சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் 23ஆம் திகதி கல்வி அமைச்சருடன் நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்காக வருகை தந்திருந்த அதிபர்கள் பணிப்பாளர்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

Related Articles

Latest Articles