கொழும்பில் நாளை 14 மணிநேரம் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (27) சனிக்கிழமை 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 5, 6, தெஹிவளை-கல்கிசை மற்றும் மொரட்டுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ஜயந்திபுர, பெலவத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles