ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சு.க.வின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற போதே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் முஸ்தபா, வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
