போதை ஊசி செலுத்தி யுவதி மீது வன்புணர்வு: சூத்திரதாரியான சகோதரனுக்கு மறியல்

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதி யில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந் துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை, யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவ தைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.

பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத் தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டமையுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக் கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணின் சகோத ரனே, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருள்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்துப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles