நுவரெலியாவில் கடும் காற்று: பல வீடுகள் சேதம்

நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்று வீசுவதுடன், மழை பெய்துவருகின்றன.
இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் அதிகமான வீடுகளில் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் இன்றும் (23) தொடர்ச்சியாக கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதியில் பல பிரதான வீதியோரங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன.

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் நுவரெலியா மத்திய பொது சந்தைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.  எனவே ஹட்டன் நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles