கொட்டகலையில் பலகை தொழிற்சாலை அமைக்க முயற்சி: தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச் செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று 01 ம் திகதி முன்னெடுக்க முற்பட்டுள்ளது.

இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சீரற்ற காலநிலையின்போது ரொப்கில் தோட்டப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போதும் கொட்டகலை பகுதியில் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரொப்கில் பகுதியும் ஒன்றாக இருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக காணிகளை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தபோது, தேயிலைச் செடிகளை அகற்ற முடியாது என்றும், உரிய Nடீசுழு அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், தற்போது பலகை ஆலையை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை அகற்ற முடிவது எவ்வாறு என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக காணிகளை கோரவில்லை என்றும், தங்களது குடும்பங்களுடன் வாழ்வதற்காகவே காணிகளை கோருவதாகவும் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பலகை ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியில் இந்து ஆலயம் ஒன்றும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தங்களது வழிபாட்டு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர், பொருத்தமான இடத்தில் ஆலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles