சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன்இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் உறுதியேற்றார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டள்ளார்.

Related Articles

Latest Articles