தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது , தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அந்த வர்த்தமானி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை அந்த 1700 ரூபா கிடைக்குமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தொழில் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது, பின்னர் சிலர் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். தற்போது அந்த நிறுவனங்கள் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கையில் இன்று விவசாய பொருளாதாரம் உருவாகியிருக்கிறது.

சில நிறுவனங்களினால் அந்தத் தொகையை வழங்க முடியும் என்றால் மற்றைய நிறுவனங்கள் அதைச் செய்யாமல் இருப்பது நியாயமற்றது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறும் நிறுவனங்களிடமிருந்து காணியை பெற்று சம்பள அதிகரிப்பு வழங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தொகையை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். அதனால் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கிராமங்களாக கட்மைக்க நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles