ஜனாதபதி தேர்தலில் ரொஷான் ரணசிங்கவும் போட்டி!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அறிவித்தார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles