பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பள உயர்வு முன்மொழிவுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, எதிர்வரும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் பிரகாரமே, சம்பளம் கிடைக்கப்பெறவுள்ளது.
