நவம்பர் 14 பொதுத்தேர்தல்!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரை இதற்கான வேட்புமனுக்களைப் பெறுவதற்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கூட்டுவதற்கும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேளையில், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles