நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களே, தேர்தலில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சஜித் அணியும் கதவடைப்பு செய்துள்ளதால் ஒரு சில அரசியல் வாதிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.