உள்ளாட்சிசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது.
கட்சியின் தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருவதுடன், இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபைக் கூட்டத்தின்போதும், தனி வழி செல்வது பற்றி ஆராயப்பட்டது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
