ஏப்ரல் இறுதிக்குள் குட்டி தேர்தல்: உறுதிப்படுத்தியது அரசு!

“ உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும்.” என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.

குட்டி தேர்தலுக்காக வேட்பு மனு ஏற்கும் திகதி வெளியாகியுள்ள நிலையிலேயே, தேர்தல் நடத்தப்படும் கால எல்லையை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

“ ஜுன் 02 ஆம் திகதி முதல் உள்ளுராட்சிசபைகள் செயல்பட ஆரம்பிக்கும். தேர்தலை நடத்தி ஒரு மாதகால அவகாசம் தருமாறு எம்மிடம் கோரப்பட்டது.
இதற்கமையவே ஜுன் 02 ஆம் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அப்படியாயின் மே 02 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். அந்தவகையில் ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.” – எனறும் பிரதி அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles