காலநிலை எச்சரிக்கை: இன்று முதல் தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இன்று (ஜூலை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதேவேளை, நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும்.

காற்று தென்மேற்குத் திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றராக காணப்படும். ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0–2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

Related Articles

Latest Articles