வேன் விபத்து மூவர் காயம்!

நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து ராகலை நோக்கி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனொன்று இன்று புரூக்சைட் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து , மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வி,தீபன்ராஜ்

Related Articles

Latest Articles