காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இதொகா ஆதரவு!

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளைய தினம்(21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவிருக்கின்றது.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் எமது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்தில் மலையக மக்கள் இணைந்து கொள்ள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.

இது தொடர்பான ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்…

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும் , பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்…

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு
இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான் நாளை நடைபெறவிருக்கின்ற “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles