திருகோணமலை மாநகர சபை ஆட்சி அதிகாரம் தமிழரசு வசம்

திருகோணமலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.

இந்த அமர்வுக்குக் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி   தலைமை தாங்கினார்.

மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கு எந்தவொரு கட்சியும் அதற்குறிய 50 வீதம் கோரத்தைக் கொண்டிருக்காத நிலையில் மேயர் தெரிவு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழசுக் கட்சியின் சார்பில் கந்தசாமி செல்வராஜாவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் மேயர் தெரிவுக்குப் போட்டியிட்டனர்.

சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்புக்குக்  கோரியதனால் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் 6 வாக்குகளையும் பெற்றனர்.

அதனடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகர சபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்துத் துணை மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமட் மெளசூம் சபையில் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles