மக்கள் ஆணையைமீறி செயற்படுகிறது அரசு!

மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நுவான் போபகே கூறியவை வருமாறு,

” மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டணம் தற்போது அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. மாறாக பிள்ளையானுடன் கூட்டு சேர்ந்து வாகரையில் ஆட்சி அமைக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

காலியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மொட்டு கட்சியுடன் என்பிபி இணைந்து ஆட்சியமைக்கின்றது. தொண்டமான்களின் பிடிக்குள் இருந்து மலையகம் மீட்கப்படும் எனக் கூறியவர்கள், மலையகத்தில் இதொகாவின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை தவிடுபொடியாக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைக்கின்றன.” -என்றார் நுவான் போபகே.

Related Articles

Latest Articles