எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து: சஜித் அணி கூறுவது என்ன?

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை சில கட்டுப்பாடுகளுடன் நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

” முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை மட்டுப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தால் ஆதரவளிக்கப்படும்.
அதேபோல கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மருந்துகூட வாங்க முடியாத நிலையில் சிலர் உள்ளனர்.

எனவே, உரிய மதிப்பாய்வுகளை செய்து ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பலமாக உள்ளவர்களுக்கு தேவை இல்லை.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles