அணு குண்​டு​களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை!

அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் II’ ஏவு​கணை​யும் அமெரிக்க விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டன.

கடந்த 1970-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டது.

தற்​போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவு​கணை​கள் அமெரிக்​கா​வின் மோன்​டா​னா, நார்த் டகோ​டா, வயோமிங் பகு​தி​களில் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன.

‘மினிட்​மேன் III’ ஏவு​கணை​யின் திறன் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் அதிவேகத்​தில், அதிக தொலைவு சீறிப் பாயும் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை​யின் சோதனை மார்ச் 3-ம் திகதி இரவு 11.01 மணிக்கு (பசிபிக் நேரம்) நடத்​தப்​பட்​டது.

அமெரிக்​கா​வின் வாண்​டன்​பெர்க் விண்​வெளி படைத் தளத்​தில் இருந்து புறப்​பட்ட ஏவு​கணை, மார்​ஷல் தீவு​களுக்கு அருகே நிலைநிறுத்​தப்​பட்​டிருந்த 2 இலக்​கு​களை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழித்​தது. ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை மூலம் ஒரே நேரத்​தில் பல்​வேறு இலக்​கு​களை தனித்​தனி​யாக தாக்கி அழிக்க முடி​யும்.

இந்த ஏவு​கணை முதலில் விண்​வெளி​யின் வளிமண்​டலத்தை தாண்​டிச் செல்​லும். பின்​னர் விண்​வெளி​யில் இருந்து மீண்​டும் வளிமண்​டலத்​துக்​குள் நுழைந்து தரை​யில் உள்ள இலக்​கு​களை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். 36,000 கிலோ எடை, 59.5 அடி நீளம், 5.5 அடி விட்​டம் கொண்ட ஒரு ஏவு​கணை​யில் 3 அணு குண்​டு​கள் வரை சுமந்து செல்ல முடி​யும்.

இந்த ஏவு​கணை மணிக்கு 24,000 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும். சுமார் 13,000 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை மூலம் உலகின் எந்த பகு​தி​யை​யும் 30 நிமிடங்​களில் தாக்கி அழிக்க முடி​யும். இவ்​வாறு அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரில் ஈரான் ராணுவத்​துக்கு ரஷ்​யா​வும் சீனா​வும் மறை​முக​மாக உதவி செய்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் ஈரான், சீனா, ரஷ்​யா​வுக்கு எச்​சரிக்கை விடுக்​கும் வகை​யில் டூம்​ஸ்டே (அழிவு நாள்) ஏவு​கணை என்​றழைக்​கப்​படும் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை சோதனையை அமெரிக்​கா நடத்தியிருப்​பது உலக நாடு​களின்​ கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Latest Articles