காசா பேரவலம் லெபனானிலும் தொடர்கிறது: சிறார்கள் பரிதவிப்பு!

லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் அங்குள்ள சிறுவர்கள் மீது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக யுனிசெஃப் (UNICEF) எச்சரித்துள்ளது.

அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒரே நாளில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 3,90,000 சிறுவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்கள் கடுமையான மன அதிர்ச்சிக்கும் பாதுகாப்பு அற்ற சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லெபனானில் ஒரு மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது.

காசாவில் சிறார்களுக்கு நடந்தது தற்போது லெபனானில் நடக்கின்றது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles