அமைதி பேச்சில் நேர்மை வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து!

நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி முயற்சியை அவர் வரவேற்றுள்ளார்.

மேற்படி இராஜதந்திர வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு நிலையான உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் மீண்டும் மோதல்கள் வெடிப்பதைத் தடுக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் இஸ்லாமாபாத் கலந்துரையாடல் மிக முக்கியம் என ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முக்கியமான இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தனது சிறப்பு தூதுவரையும் ஐ.நா. செயலாளர் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles