ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது:
” எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க அனுமதி வழங்கமாட்டோம்.
இந்த நீரிணை தொடர்ந்து எங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.
சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் நீரிணையை மூடுவோம் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது, கடல் கொள்ளைக்கு சமம் ஆகும்.
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் பெர்சிய வளைகுடா, ஓமன் கடல் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். எங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை மிகக் கடுமையாக தாக்குவோம். இவ்வாறு இப்ராகிம் தெரிவித்தார்.










