நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

நுவரெலியா, கிரகரி வாவியில் நேற்று (19) இரு படகுகள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு படகு கவிழ்ந்துள்ளது.

குறித்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த இரு படகுகளை இயக்கியவர்கள் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் இன்று (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நானுஓயா, சந்ரு

Related Articles

Latest Articles