தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு!
” கோதாபய ஆட்சியில் இப்படியான பல அராஜக சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன்.
இப்போது அனுர ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள் இனவாத அராஜகமா?
ஆட்சி மாறியதாம்! ஆனாக்க காட்சி மாறலை!
இரத்தினபுரி மாவட்ட நீலகாமம் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் ஹெல்மட் குண்டர்கள், வீடில்லா மலைநாட்டு தமிழ் பிரஜை கட்டிய வீட்டை, உடைத்து, அப்பாவிகளை தாக்குகிறார்கள்.
“சட்ட விரோதமாக” வீடு கட்டினார் என Puwanendran Nishantha Kumar பொலிஸால் கைது. காயமடைந்த Ganeshan Vijayakanth மருத்துவமனையில்.
இரத்தினபுரியில் இருந்து நம்ம சந்திரகுமார் தகவல் தந்த உடன் காவத்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரத்னவை அழைத்து கடுமையாக சத்தமிட்டேன். சந்திரகுமாரும் அழைப்பில் இருந்தார்.
“..வீட்டு பிரச்சினையை அனுர அரசுடன் நாம் பார்த்து கொள்கிறோம். நீர் தாக்குதல் நடத்திய குண்டர்களை முதலில் கைது செய். கைதான நிசாந்தனை பிணையில் விடு..” என்றேன்.
நான் இதற்கு மேல் நடவடிக்கை எடுக்க முன், #NPP மந்திரிகளை பொங்கி எழுந்து தலையிடுமாறு சொல்றேன்.
எங்கேயப்பா அந்த NPP மலையக ஆட்கள்?
கேட்டுகோங்க, கீழே சொல்பவை எல்லாம் நடக்கனும்!
1)தோட்டங்களில் தரிசு காணிகளில், வீடில்லாதோர் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க உரிமை வேண்டும்.
2)இராணுவத்தில் இருந்து ஓடி வந்தவர்களை கொண்டு தோட்ட நிர்வாகங்கள் குண்டர் படை அமைக்க கூடாது.
#காவத்தை #சம்பவம்
மீண்டும் பிரேமரத்தின OIC இடம் பேசினேன்.
அப்பாவிகளுக்காக பேச நாதி இருக்கிறது என்றதும், கைதான நிசாந்தன் குமாரை பிணையில், பொலிஸ் விடுவித்தது. காலில் வருத்தம் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அனுப்ப பட்டுள்ளார். அந்த இடத்தில் நமது பெல்மதுள்ள பிரதேச சபை உறுப்பினர் தம்பி தனூஷ் இருக்கிறார்.
இராணுவத்தில், இருந்த விலகிய “கப்டன்” ஒருவர் தலைமையில் ஒரு படையை தோட்ட நிர்வாகம் நடத்துதாம். அதன் சட்டபூர்வதிதை விசாரிக்க சொன்னேன். “கப்டனிடம்” பொலீஸ் வாக்கு மூலம் எடுக்குது.
#மனோ_கணேசன்










