காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
“இது முதல் முறையல்ல.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகவே இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் நடக்கின்றபோது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழமை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இனி இத்தகைய செயல்கள் இடம்பெறாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தோட்ட நிர்வாகங்கள் இத்தகைய மிலேச்சத்தனமான செயலை நிறுத்த வேண்டும்.” எனவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
