‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்திய அரசாங்கம் மலையக மக்களின் மேம்பாட்டுக்காகவும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

அவர்களின் மருத்துவ வசதிக்காக கோடிக் கணக்கான ரூபா செலவில் டிக்கோயாவில் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தோட்ட மக்களின் குடியிருப்பு வசதிகளைக் கருத்திற் கொண்டு பாரிய வீடமைப்புத் திட்டமும் இடம்பெற்று வருகின்றது.

எனினும், கடல் கடந்த இந்தியர்களுக்கான குடியுரிமை அண்மைக் காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை பெரும் குறையாகக் காணப்பட்டது. அதை நிவர்த்தி செய்து ஓ.சி.ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

இதைக் கவனத்திற்கொண்டு அதனை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆவணங்களை இலகுபடுத்தி நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் நேரடியாக அறிவித்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இதன் மூலம் மலையக மக்கள் பல்வேறு வழிகளில் பயன்பெற வழி பிறந்துள்ளதோடு மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு அங்கீகாரம் கொடுத்த இந்தியப் பிரதமர்   மோடிக்கும் அரசாங்கத்துக்கும் மலையக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துக் கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles