போதைப்பொருள்களுடன் லுணுகலை பொலிஸாரால் ஒருவர் கைது!

போதை பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

23 ம் கட்டை கீனகோட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 370 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் . கேரளகஞ்சா 1670 மில்லி கிராம், 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

R .Tபசறை

Related Articles

Latest Articles