நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு பிரதி அமைச்சர் இன்று நேரில் சென்றிருந்தார்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ மற்றும் பெல்மடுல்ல பிரதேச சபை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.

தற்காலிக வீடு அமைக்கப்பட்டு இருந்த இடத்தினையும் பார்வையிட்டு , தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களையும் சந்தித்து, பிரதி அமைச்சர் விடயங்களை கேட்டறிந்தார். நீலகாமம் தோட்ட மக்களும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி, பிரதி அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக ஆரம்பம் முதல் தமது கவனத்தை செலுத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களும் ஊர் மக்களும் பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன், பிரதி அமைச்சரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

இப்பிரச்சனை தொடர்பாக தொடர்ந்தும் தனது கவனத்தை செலுத்துவதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர்,

குறிப்பிட்ட பிரச்சனைக்கு முகம் கொடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் சரியான நியாயத்தினை வெகு விரைவில் பெற்று தருவதற்கும், தோட்டங்களில் காணப்படும் தனியார் பாதுகாப்பு படைகள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய செயற்பாட்டினை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதற்கும் முடிவெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles