மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

​தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

​இந்த பாடசாலையின் பழைய மாணவியும், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியுமான (MOH) ரெஷ்னி துரைராஜ் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

​நிகழ்வில்
​பிரபாகரன் கபிஷன் – தலவாக்கலை

​சித்திரவேல் அனுஜா – கிரேட் வெஸ்டர்ன் (Great Western) தோட்ட வரலாற்றில் மருத்துவத் துறைக்குத் தகுதி பெற்ற முதல் மாணவி!

​விஜயகுமார் அனிதா – லோகி (Logie) தோட்ட வரலாற்றில் இந்தச் சாதனையைப் படைத்த முதல் மாணவி! ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

​கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வைத்தியர் ரெஷ்னி துரைராஜ், கோட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சன் மற்றும் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி கௌரவித்தனர்.

​”தடைகளை உடைத்து, மலையகத்தில் இருந்து மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த மாணவர்கள், எமது சமூகத்திற்குப் பெரும் முன்னுதாரணம்!”

​எமது மண்ணின் இளம் மருத்துவப் போராளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் சேவை இந்தச் சமூகத்திற்கு மேன்மேலும் கிடைக்கட்டும்

கௌசல்யா.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles