வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை: பண்டாரவளை பகுதியில் 9 பேர் கைது!

பண்டாரவளை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் சமையல்காரர் ஒருவர் உட்பட 9 பேரை, பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின் மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் பொதியிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராகப் பணியாற்றி வந்த 41 வயதுடைய நபரே இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சந்தேகநபர் ஆவார். இவர் ஹோட்டலில் தங்கியிருக்கும் அறையைத் தனது விற்பனை நிலையமாகப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் தனது அறையிலிருந்த மெத்தையை மிகவும் நுணுக்கமாகக் குடைந்து, அதனுள் சிறிய பொதிகளாகத் தயாரித்து மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். ஒரு சிறிய போதைப்பொருள் பொதி 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றவர்கள்:

பிரதான சந்தேகநபரின் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பண்டாரவெல, தியத்தலாவ மற்றும் வெளிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களில் ஒருவருக்கு 65 வயது என்பதும், ஏனையோர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்றிற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் அவர் மீண்டும் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர்களைப் பண்டாரவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

R. T. பசறை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles