ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த போது, ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக ஏணியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles