“நாம் நீலகாமம்” அறவழி போராட்டத்துக்கு சிறிதரன் எம்.பி. ஆதரவு!

“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு ,

“மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் கூலிப்படையின் மிக மோசமானத் தாக்குதலால் காயமடைந்தும், தமது சொத்துகளை இழந்த நிலையிலும் உள்ள எமது மலையக உறவுகளுக்கு நிச்சயம் நாம் துணை நிற்போம்.

அந்தவகையில் எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் சாத்வீக வழி போராட்டத்துக்கு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து போராட்டம் வெற்றியளிக்க உதவுவோம்.

மலையக உறவுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் நம்பிக்கையோடு எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களோடு கரங்களை இறுகப் பற்றிக்கொள்வோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles