டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று பிரதான வீதியை விட்டு விலகி , சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு பேருந்திற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதியும், நடத்துனரும் காயமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.










