இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுக்களைத் தொடர்ந்து, இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் , நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை அவரது செயலகத்தில் சந்தித்தார்.
பாகிஸ்தான் தூதுவராக மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் பதவியேற்ற பின்னர், மேற்கொண்ட முதல் அதிகாரபூர்வ சந்திப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு இயக்கவியல் ஆகியன குறித்தும், இதன் போது முக்கியமாக கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளை ஆய்வு செய்ததோடு, கொழும்புக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.










