2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர் பிரிவினருக்கு மாத்திரம் 18 சதவீதத்தால் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு இந்தக் கட்டண அதிகரிப்பு எவ்விதத்திலும் பொருந்தாது என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மின் உற்பத்திச் செலவு அதிகரித்ததால் ஆண்டின் முதல் இரு காலாண்டுகளில் ஏற்பட்டுள்ள சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை மற்றும் மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 18 சதவீத விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15 பில்லியன் ரூபாய் சலுகையை வழங்க அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக உடன்பட்டுள்ளதால், மொத்த மின் நுகர்வோரில் 5 சதவீதமானோருக்கு மாத்திரமே இந்த விலை அதிகரிப்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக, நாட்டின் 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.










