சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!

புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது.

88 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

489 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 310 பேர் 8 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் 529 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles