ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!

காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான இஸ் அல்-தின் அல்-ஹடாத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அதனைமீறும் வகையில் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.

காசாவின் பெரும்பகுதியை இஸ்ரேலியப் படைகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

போரினால் சிதைந்துள்ள காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் மதிப்பிட்டுள்ளன.

Related Articles

Latest Articles