ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என வென்று தொடரில் சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஷதாப் கான், அப்ரார் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
41.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
