போரில் திடீர் திருப்பம்: புடினுக்கு கடிதம் அனுப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரடி பேச்சுவார்த்தை கோரி பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க புடினுக்கு டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தனது தாக்குதல் திறனை மேம்படுத்தியுள்ள வேளையில், போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள செலென்ஸ்கி முன்வந்துள்ளார்.

போரைத் தொடர்வது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கும் புதினின் நிலைப்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் அவர், நடுநிலையான ஒரு நாட்டில் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைதியை விரும்புவதாகக் கூறும் ரஷ்யா, இந்த முன்மொழிவு குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கடிதம் போரின் தற்போதைய சூழலை மாற்றி, அமைதிக்கான புதிய பாதையை உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles