அணு ஆயுதத்தை கைவிட ஈரான் சம்மதம்: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்குரிய அமைதி ஒப்பந்தம் எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இடையில் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி போர் தொடங்கியது.

அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8-ம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இருதரப்பு இடையே அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் களம் இறங்கின.

தற்போது இருதரப்பு இடையே அமைதி வரைவு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles