ஹார்முஸ் நீரிணை திறப்பு: கடற்படையை மீளப் பெறுகிறது அமெரிக்கா!

ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் 19-ம் ஆம் திகதி கையெழுத்தாகிறது. ஒப்​பந்தம் கையெழுத்​தானவுடன் ஹார்​முஸ் ஜலசந்தி உடனடி​யாக திறக்​கப்​படு​கிறது. அங்கு அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை​யும் உடனடி​யாக விலக்கி கொள்​ளப்​படு​கிறது.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் ஈரான் கையெழுத்​திட மறுத்​த​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் தாக்​குதலை தொடங்​கின.

இதில் ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அலி கமேனி உட்பட பலர் உயி​ரிழந்​தனர். ஈரானின் பல ராணுவ தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்​த போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது.

இங்கு நூற்​றுக்​கணக்​கான கப்​பல்​கள் முடங்​கிய​தால் மாலுமிகளும் சிக்கித் தவித்​தனர். இங்கு அமெரிக்க கடற்​படை​யும் முற்​றுகை​யிட்டு ஈரான் துறை​முகத்​தின் கப்​பல் போக்​கு​வரத்தை தடுத்​தது. இது உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாட்டை அதி​கரித்து விலை உயர்​வை​யும் ஏற்​படுத்​தி​யது.

பின்னர், கடந்த ஏப்​ரல் 8-ம் ஆம் திகதி இருதரப்பு இடையே சண்டை நிறுத்​தம் ஏற்​பட்​டு, போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் பாகிஸ்​தான் மற்​றும் கத்​தார் ஆகிய நாடு​கள் இறங்​கின. செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை அமெரிக்​கா அல்​லது சர்​வ​தேச அணுசக்தி முகமை​யிடம் ஒப்​படைக்க வேண்​டும் அல்​லது அழிக்க வேண்​டும் என அமெரிக்கா கெடு விதித்​தது. இதற்கு ஈரான் சம்​ம​திக்​க​வில்​லை.

இதன் காரண​மாக இரு தரப்பு இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட இழுபறி ஏற்​பட்​டது. அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​தி​டா​விட்​டால் ஈரானை முற்​றி​லும் அழித்​து​விடு​வோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல முறை எச்​சரித்​தார்.

ஆனால், ஈரான் தனது நிபந்​தனை​யில் உறு​தி​யாக இருந்​து, அமெரிக்கா தாக்​கி​னால், வளை​குடா நாடு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என எச்​சரிக்கை விடுத்​தது. இருதரப்பு இடையே அவ்​வப்​போது சிறிய அள​வில் மோதல்​களும் நடந்தன.

இந்த நிலையில், அணு ஆயுத தயாரிப்பை கைவிட ஈரான் சம்​மதம் தெரி​வித்​த​தால் சுமார் 2 மாதங்​களாக நீடித்த இந்த இழுபறி தற்​போது முடிவுக்கு வந்​துள்​ளது. அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட அமெரிக்கா​வும், ஈரானும் முடிவு செய்​துள்​ளன. சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் வரும் 19-ம் திகதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது. லெப​னானும் இந்த ஒப்​பந்​தத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது.

இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானவுடன் 19-ம் திகதி முதல் அனைத்து கப்​பல் போக்​கு​வரத்​துக்​கும் ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​படும் என்று அமெரிக்க ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அதே நேரத்​தில், அமெரிக்க கடற்​படை முற்​றுகை உடனடி​யாக நீக்​கப்​படும் என்று ஈரான் தெரி​வித்​துள்​ளது. இதையடுத்து நேற்று இரவே எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்​கள் செல்​லத் தொடங்​கி​விட்​ட​தாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

அமைதி ஒப்பந்தம் மூலமாக ஈரான் – அமெரிக்கா போர் உடனடி​யாக முடிவுக்கு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்​கப்​படு​கிறது. 30 நாட்​களுக்​குள் அமெரிக்க கடற்​படை முற்​றுகை நீக்​கப்​படும். லெப​னான் உட்பட அனைத்து முனை​களி​லும் போர் மற்​றும் ராணுவ நடவடிக்​கைகள் உடனடி​யாக​வும், நிரந்​தர​மாக​வும் முடிவுக்கு வரும்.

எண்​ணெய் விற்​பனை தொடர்​பாக ஈரான் மீதான தடைகள் நிறுத்தி வைக்​கப்​படும். அணு ஆயுத தயாரிப்​பில் ஈரான் ஈடு​ப​டாது. ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்ட 60 நாட்​களுக்​குள் அணுசக்தி விவ​காரங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு இறுதி ஒப்​பந்​தம் எட்​டப்​படும். ஈரானிய சொத்​து​களில் 24 பில்​லியன் டாலர்​களை விடுவிக்க வேண்​டும். இறுதி ஒப்​பந்​தம் குறித்த பேச்​சு​வார்த்​தைகள் 60 நாட்​களுக்​குள் நடை​பெறும்.

Related Articles

Latest Articles