தங்கள் படைகள் ஈரான் மீது மற்றுமொரு சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
“அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரையோரமாக அமைந்திருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் , கடலோரக் கண்காணிப்பு சாதனங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) சேமிப்பு தளங்கள், கடற்படைத் திறன்கள் மற்றும் இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட சுமார் 90 ஈரானிய இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.” – என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்,இதற்கு முந்தைய நாள் இரவில் ஈரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்த சமீபத்திய புதிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் உரிமை கோரியதற்கு அடுத்த நாளே இந்த 90 இலக்குகள் மீதான புதிய தாக்குதல் அலை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
