சிரேஷ் ஊடகவியலாளர் கந்தப்பளை ரமேஷ் காலமானார்

நுவரெலியா, கந்தப்பளை – பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகன் ரமேஷ் (வயது 55) கொழும்பில் நேற்று (12) காலமானார்.

நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த அன்னாரது பூதவுடல், தற்போது கொழும்பிலிருந்து அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்று (13) இரவு முதல் கந்தபளை, பார்க் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (15) புதன்கிழமை நடைபெறவுள்ளன.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Related Articles

Latest Articles