நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.
கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமே, சிஐடியினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அதேபோல நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளிடமும், வரும் நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சிஐடியின் 5 குழுக்கள், விசாரணை நடத்திவருகின்றன.










