ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவரைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவர் ரபி ஷிமோன் ஆக்செல் வானிஷ் , இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலே-யின் (Javier Milei) வாழ்த்துச் செய்தியை நெதன்யாகுவிடம் தெரிவித்தார்.
அதில் அவர் நெதன்யாகுவைத் தனது “நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நெதன்யாகு ,
“ஜேவியர், நீங்கள் ஒரு சிறந்த நண்பர். ஒரு உண்மையான நண்பர். நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாளை நடைபெறவுள்ள போட்டி உட்பட பல வழிகளில் அர்ஜென்டினாவுக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம். வாழ்த்துகள்!” – என்று குறிப்பிட்டார்.
